Monday, August 29, 2016
ராமநாதபுரத்தில் செயல்பட்டுவரும் தொண்டு நிறுவன விடுதிகளை பதிவு செய்ய உத்தரவு!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகளுக்கான
தங்கும் விடுதி மற்றும் இல்லங்களை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர்
நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள்,
தனியார் நிறுவனங்கள், சங்கங்கள், தொழிற்சாலைகள்,
மதம் சார்ந்த நிறுவனங்கள் போன்றவற்றால் நடத்தப்படும்
குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவற்றை இளைஞர்
நீதிச்சட்டம்–2015,
தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள்
மற்றும் காப்பகங்கள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம்–2014 ஆகிய சட்டத்தின்கீழ் பதிவு செய்ய வேண்டும்.
இன்னும் 6 மாத காலத்திற்குள்
விண்ணப்பித்து உரிமம் அல்லது பதிவு பெற்றுக்கொள்ள வேண்டும். சட்ட நடைமுறைகளை
பின்பற்றாத விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவற்றை மூடுவதற்கு உடனே நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர் நீதிச்சட்டத்தின்
கீழ் பதிவு பெறாமல் மத ரீதியாக செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள்
இருந்தால் உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள்
பாதுகாப்பு அலுவலகத்துக்கு 04567–231098 என்ற தொலைபேசி எண்ணில்
தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர்.
செய்தி:
தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment