(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 27, 2016

10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கான வினா-விடை புத்தகங்கள் விற்பனை!!

No comments :
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கான வினா-விடை புத்தகங்கள் செவ்வாய்க்கிழமை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு கூறியது:

பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினா-விடை புத்தகம், ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்புக்கான கணிதப் பாட வினாக்கள் அடங்கிய ஸ்கோர் புத்தகம், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுக்கான தீர்வுப் புத்தகம் ஆகியன விற்பனை செய்யப்படுகின்றன.அதேபோல், 12 ஆம் வகுப்புக்கான கணிதப் பாட வினா-விடைகள் அடங்கிய கம் புத்தகம் மற்றும் அனைத்துப் பாடங்களுக்கான வினா-விடை புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.


அரசுப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கு இப்புத்தகங்கள் மிகவும் உதவியாக இருக்கும் வகையில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் அரசு பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் அவற்றுக்கான விடைகள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதை, மாணவ, மாணவியர் வாங்கிப் பயனடையுமாறு, முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment