(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 29, 2016

அரசு மருத்துவமனைகளில் பணி நேரத்தில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனைகளில் பணி நேரத்தில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார்.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்படும் வகையில், நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் பலரும் பணி நேரத்தின்போது, பணியில் இல்லாமல் இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு ஏராளமான புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதன்பேரில், ஆட்சியர் எஸ். நடராஜன் வெள்ளிக்கிழமை திடீரென அங்கு சென்று ஆய்வு செய்தார்.

அதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சில மருத்துவர்கள் மட்டும் உரிய தகவலின்றி பணியில் இல்லாமலும்பணி நேரத்தில் பணியாற்றாமலும் இருந்து வருவதாகப் புகார்கள் வந்துள்ளன. இதனால்திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போதுமருத்துவர்களின் வருகைப் பதிவுக்கான பயோ-மெட்ரிக் கருவி பழுதாகி இருந்ததும் தெரியவந்தது. உடனடியாகஅதை பழுதுநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பயோ-மெட்ரிக் வருகைப் பதிவை கண்காணிக்கவும்மருத்துவத் துறை இணை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தின் முக்கிய இடங்களில்  ரகசிய கேமராக்கள் பொருத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு சாராத 5 கண் மருத்துவமனைகள் மூலம் கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த 2015 ஜனவரி முதல் ஜூன் வரை 526 பேருக்கு கண் அறுவைச் சிகிச்சை செய்து கண்ணொளி பெற்றுள்ளனர்.

185 பேருக்கு அரசு மானியத் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1.85 லட்சத்துக்கான காசோலைகளும் வழங்கப்பட்டதாகவும், ஆட்சியர் தெரிவித்தார்.   இந்த ஆய்வின்போது, மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் சகாயஸ்டீபன்ராஜ், சுகாதாரப் பணிகள் துறையின் துணை இயக்குநர் டாக்டர் மீனாட்சி, அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சாதிக்அலி ஆகியோரும் உடனிருந்தனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment