வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! இந்த நானில மாந்தருக் கெல்லாம்.

Monday, October 31, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் தூர்வாரும் பணிகள்!!

No comments :
வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீரை சேமிக்க ஏதுவாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் தூர்வாரும் பணிகள், ஆழப்படுத்தும் பணிகள் நீர்வரத்து கால்வாய்களை சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் ஆர்.காவனூர் கிராமத்தில் காரேந்தல் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை சீர்செய்யும் பணிகளையும் அரசடிவண்டல் கிராமத்தில் வைகை ஆற்றுப்படுகை மற்றும் இடது பிரதான கால்வாயில் இருந்து பிரிந்து செல்லும் மேல நாட்டார் கால்வாய் தூர்வாரும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நாகரத்தினம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெள்ளைச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment