Sunday, October 9, 2016
TNOU வில் தொலைதூர B.Ed படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!!
கல்வியாண்டு 2017க்கான தொலைதூர
பிஎட் படிப்பிற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகம் -சென்னை அறிவித்துள்ளது.
இந்தப் படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 14ம் தேதிக்கு முன்னதாக தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் படிப்பில் சேர்வதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப முறைகள் பற்றிய விபரங்களாவது:
மேலும் இந்தப் படிப்பில் சேர்வதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப முறைகள் பற்றிய விபரங்களாவது:
தகுதி: - விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு
பாடப்பிரிவில் இளங்கலை முடித்திருக்க வேண்டும்.
தமிழ்/ஆங்கிலம்/வேதியியல்/தாவரவியல்/விலங்கியல்/வரலாறு/புவியியல்/கணினி அறிவியல்/அப்ளையிட்
கணிதவியல்
- மேற்கூரிய பாடப்பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைகழகங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்களும் இந்தப் படிப்பிற்கு
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: -விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது –
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள
விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். - பின் அதை பூர்த்தி செய்து, தேவையான மற்ற சான்றிதழ்களுடன்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்,
எண் 577, அண்ணா சாலை,
சைதாப்பேட்டை,
சென்னை - 600 015 .
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பங்களைப் பெற கடைசி தேதி: அக்டோபர்13
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தர கடைசி தேதி:
அக்டோபர்14
விண்ணப்பிக்க்கும்
நண்பர்கள் அனைவருக்கும் முகவை முரசின் வாழ்த்துக்கள்!!
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment