Thursday, December 22, 2016
காலாவதியான விசா வழங்கி 7 பேரிடம் மோசடி, டிராவல்ஸ் உரிமையாளர் கைது!!
வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக்கூறி 7 பேரிடம்
ரூ.3.35 லட்சம் முறைகேடு செய்ததாக டிராவல்ஸ் உரிமையாளரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது
செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி.பட்டினம் சொலகான் பேட்டை பகுதியை சேர்ந்த வேலுவின் மகன் மோகன்ராஜ் (39). இவர் வெளிநாடுகளுக்கு ஆள் அனுப்பும் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இவரிடம் தேனி மாவட்டம் கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் வசிக்கும் பாத்திமா டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரான அபுபக்கர் மகன் அகமது என்பவர் உள்பட அப்பகுதியை சேர்ந்த 7 பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்காக ரூ.3.35 லட்சம் கொடுத்தனராம்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட மோகன்ராஜ் 7 பேருக்கும்
காலாவதியான விசாவைக் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ராமநாதபுரம்
காவல் கண்காணிப்பாளர் ந.மணிவண்ணனிடம் அகமது கொடுத்த
புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு
செய்து மோகன்ராஜை தேடி வந்தனர்.
இந்நிலையில், மோகன்ராஜ் அறந்தாங்கியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸார் அங்கு சென்று கைது செய்தனர். விசாரணையில், மோகன்ராஜ் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் நடத்தி 87 பேரிடம் மொத்தம் ரூ.49 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment