(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, December 18, 2017

ராமேசுவரத்தில் மார்கழி மாத அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடினர்!!

No comments :
ராமேசுவரத்தில் மார்கழி மாத அமாவாசை முன்னிட்டு   அக்னிதீர்த்தக்கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  புனித நீராடினர்.

ராமேசுவரத்தில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில்  ஆயிரத்துக்கு  மேலான பக்தர்கள் ரயில் மற்றும் அரசு பேருந்து, தனியார் வாகனம் மூலம் வந்து குவிந்தனர். அதன் பின்னர் அக்னிதீர்த்தம் கடல் பகுதியி்ல் முன்னோர்களுக்கு வருடாந்திர திதி பூஜையும்,தர்பணபூஜைகள் மற்றும் சிறப்பு  பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டு அக்னிதீர்த்தக்கடலிலும், ராமநாதசுவாமி திருக்கோயிலுள்ள  22 தீர்த்தக்கிணற்றில் புனித நீராடினார்கள்.

அமாவாசையை முன்னிட்டு திருக்கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி குடிநீர் வசதிகள், ஓய்வு இடங்கள்,வழக்கத்தைவிட பக்தர்களுக்கு கூடுதாலக அன்னதானம் உள்பட சிறப்பான முன் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி  உத்தரவின்பேரில் உதவிக்கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆலோசணைப்படி அலுவலர்களும்.ஊழியர்களும் செய்திருந்தனர். 



ராமேசுவரம் கோயிலில் மார்கழி மாதத்தையொட்டி நடைகள் திறப்பு நேரம் மாற்றம்.
 ராமேசுவரம்,டிச,17:ராமேசுவரம் கோயிலில் மார்கழி மாதத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக மார்கழி மாதம் 1 ஆம் தேதி முதல் திருக்கோயில் நடைகள் திறக்கப்படும் நேரம் கோயில் நிர்வாக அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் 3 மணிக்கு கோயில் நடைகள் திறக்கப்பட்டு தொடர்ந்து அதிகாலையில் 4 மணி முதல் 5 மணிவரை பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து காலபூஜைகளும், சிறப்பு பூஜைகளும்,தீபாரதனை வழிபாடுகளும் நடைபெறும்.அதன் பின்னர் இரவு 8 மணிக்கு கோயில் நடைகள் சாத்தப்படும். அதுபோல பக்தர்கள் கோயிலுள்ள புனித தீர்த்தத்தில் நீராடுவதற்காக அதிகாலை 5 மணிக்கு தீர்த்தக்கவுண்டர்கள் திறக்கப்படும் என கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி தெரிவித்தார். 


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment