(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 28, 2017

ராமநாதபுரம் மாவட்ட வார்டு மறுவரையறை பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறுவரையறை பட்டியலை கலெக்டர் நடராஜன் வெளியிட்டார்.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், அக்.,2016ல் முடிவடைந்த நிலையில், செப்.,ல் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடத்த இருந்த நிலையில், உள்ளாட்சி வார்டு எல்லைகளை மறு வரையறை செய்தபின்,தேர்தல் நடத்த வேண்டும், என்றஉயர்நீதிமன்ற உத்தரவால் தேர்தல்ரத்து செய்யப்பட்டது.

தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின் படி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வார்டு எண்ணிக்கையில் மாற்றங்களின்றி, சராசரி மக்கள் தொகையை கணக்கில் கொண்டு வார்டு எல்லைகள் மறு வரையறை செய்யப்பட்டது.

அதன்படி, மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில், கிராம ஊராட்சி வார்டுகள் எண்ணிக்கையில் 25 சதவீதம் கூடுதலாகவோ, அல்லது குறைவாகவோ இருக்கலாம். ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு 10 சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.

அதன்படி, மாவட்டத்தில் 3,075 கிராம ஊராட்சி வார்டுகளும், 170 ஊராட்சி ஒன்றிய வார்டுகளும், 17 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கான மறுவரையறைபட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் நடராஜன் பட்டியலை வெளியிட்டார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment