(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, December 24, 2017

கீழக்கரை சாலையில் வழிந்தோடும் சாக்கடை, அதிகாரிகள் கவனிப்பார்களா?!!

No comments :

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் குறிப்பாக வடக்குத்தெரு பகுதி 19ம் மற்றும் 20ம் வார்டுகளில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் தெருக்களில் நிறைந்து பாதசாரிகளுக்கு சிரமத்தை கொடுத்துள்ளது.


இதைப்பற்றி அப்பகுதியைச்சார்ந்த திரு.நசுருதீன் கூறுகையில்:

இந்த கால்வாய் அடைப்பைப்பற்றி பலமுறை நகராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கையில்லை. தேங்கும் கழிவுநீர் அருகிலுள்ள பெண்கள் தொழுகைப்பள்ளிக்குள் வழிகிறது(வீடியோ பதிவு)தொழுகைக்கு வருபவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், அவ்வழி செல்லும் பாதசாரிகளும் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதன் காரணமாக நோய் பரவும் அபாயமும் இருக்கிறது.


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்க எடுக்க வேண்டும் என்பதே எங்கள் பகுதி மக்களின் கோர்க்கை என்று கூறினார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment