Tuesday, January 10, 2017
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.24 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுப்பொருட்கள்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.24 லட்சம்
குடும்ப அட்டைதார்களுக்கு விலையில்லா பொங்கல் பரிசுப்பொருள்கள் விநியோகத்தை
திங்கள்கிழமை ஆட்சியர் எஸ்.நடராஜன் தொடக்கி வைத்தார்.
ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெருவில் உள்ள நியாய விலைக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியருடன் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா, ராம்கோ தலைவர் செ.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இத்திட்டத்தின் கீழ் கடலாடியில் 28,992,
கமுதி 29,688,
கீழக்கரை 31,774,
பரமக்குடி 63,447,
முதுகுளத்தூர் 31,597,
ராமநாதபுரம் 66,572,
ராமேசுவரம் 17525,
திருவாடானை 54903
ஆகிய 8 தாலுகாக்களில் மொத்தம் 3,24,678 பேருக்கு பொங்கல் பரிசுப்பொருள்கள் வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் எஸ்.நடராஜன்
தெரிவித்தார்.
இவ்விழாவில் ராம்கோ பொதுமேலாளர் பாட்ஷா வரவேற்று பேசினார்.
கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் ஹேமாசலோமி, பொதுவிநியோகத்
திட்டத் துணைப் பதிவாளர் பத்மகுமார்,தமிழ்நாடு நுகர்பொருள்
வாணிபக்கழக மண்டல மேலாளர் கோ.ஜெயசங்கர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment