Wednesday, January 18, 2017
கீழக்கரை அருகே தடையை மீறி எருதுகட்டு நடத்தியதாக 40 பேர் மீது வழக்கு!!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தடையை மீறி எருதுகட்டு
நடத்தியதாக 40
பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி சிலை
எடுத்த அய்யனார் கோயில் அருகே தடையை மீறி கடந்த 15ஆம் தேதி எருது கட்டு
நடத்தியதாக அக்கிராமத்தை சேர்ந்த 15 பேர் மீது கீழக்கரை
போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதே போல கடந்த 16 ஆம் தேதி காஞ்சிரங்குடியில்
கண்ணன் கோயில் அருகில் தடையை மீறி எருதுகட்டு நடத்தியதாக ராமநாதபுரம் மாவட்ட
எருதுகட்டு நடத்துவோர் சங்கத்தின் தலைவர் ஆதித்தன் உள்பட 25 பேர் மீதும் கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment