(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, January 28, 2017

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் எழுத்தர் வேலை!!

No comments :

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் எழுத்தர் (Clerk) பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக விரைவில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிக்கு பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., பி.இ., பி.டெக். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
கலை அறிவியல் பட்டம் என்றால் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் அவசியம்.

இன்ஜினீயரிங் படிப்பு முடித்தவர்கள் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

பட்டப் படிப்புகள் ரெகுலர் முறையில் பெற்றதாக இருக்கவேண்டியது அவசியம். அஞ்சல்வழி கல்வித் திட்டம் மற்றும் திறந்தநிலை கல்வித் திட்டத்தில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் அடிப்படைக் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். தமிழில் நன்கு பேச, எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 24. முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் 26. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி.,பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு ஆன்லைன் வழியில் நடைபெறும். நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர்கள், எழுத்தர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர்.

எழுத்தர்களுக்குச் சம்பளம் ரூ..20,200 என்ற அளவில் கிடைக்கும். உரிய கல்வித்தகுதியும் வயதுத் தகுதியும் உடைய பட்டதாரிகள் ஆன்லைனில் ( www.tmb.in ) விண்ணப்பிக்க வேண்டும். (வங்கியின் இணையதளப் பக்கத்தில் வலதுபுறம் அடியில் ‘Recruitment/Career’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்) ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தைப் பிரிண்ட் அவுட் எடுத்து அத்துடன் தேர்வுக்கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்ட் மற்றும் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்துத் தூத்துக்குடியில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு பிப்ரவரி 2-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் தேர்வின் விவரம் குறித்து விண்ணப்பதாரர்களுக்குத் தபாலிலும் மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்படும் என்று தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறிவித்துள்ளது.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment