வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Saturday, January 28, 2017

ராமநாதபுரம் அருகே கஞ்சா வியாபாரி கொடூர கொலை!!

No comments :
தலையில் கல்லைப்போட்டு கஞ்சா வியாபாரி கொடூரமாக கொல்லப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (60), கஞ்சா வியாபாரியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ராமகிருஷ்ணன் சென்றார். அப்போது, மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர். கீழே தள்ளி, அவரது தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுவிட்டு தப்பினர்.மண்டபம் போலீசார், ராமகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment