(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 4, 2017

அரசு மருத்துவமனையில் பணியாளர்களின் அலட்சியத்தால் நோயாளிகள் அவதி!!

No comments :
அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பணி செய்யாமல் அடிக்கடி வெளியே சென்று விடுவதால், பெயர்களை பதிவு செய்ய முடியாமல் நோயாளிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். 

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுமகப்பேறு பிரிவுதீவிர இருதய சிகிச்சை பிரிவுஎலும்பு முறிவுஅறுவைச் சிகிச்சை பிரிவுகுழந்தை மருத்துவம்கண் மருத்துவம்பல் மருத்துவம்மனநல மருத்துவம்விஷ முறிவு சிகிச்சைகாசநோய் சிகிச்சைசித்த மருத்துவம்ஹோமியோபதி மருத்துவம்மண்டல பரிசோதனைக் கூடம் உட்பட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
தினமும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் நிர்வாக அலுவலகம்இணை இயக்குநர் அலுவலகம்அரசு நர்சிங் கல்லூரிபணியாளர் கூட்டுறவு சங்கம்பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் அலுவலகம்மலேரியா பரிசோதனை கூடம் ஆகியவையும் செயல்பட்டு வருகிறது. 



அரசு மருத்துவமனையில் அட்டெண்டர் பணிக்கு பணியாளர்கள் வந்தாலும் இருக்கையில் அமர்ந்து பணி செய்யாமல் அடிக்கடி வெளியே சென்று விடுகின்றனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் நோயாளிகளுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளுக்கு நோயாளிகளின் பெயர்களை பதிவு செய்ய முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதுதவிர இங்கு நோயாளிகளுக்கு தகுந்த கழிப்பறை வசதிகள் இல்லை. இருக்கும் கழிப்பறைகளும் இடிந்தும், சுகாதாரமின்றியும் உள்ளன. நர்சுகள், ஊழியர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு என்று தனி கழிப்பறைகள் கிடையாது. அவர்களும் நோயாளிகளின் கழிப்பறைக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் பார்வையாளர்களாக வரும் நூற்றுக் கணக்கானோர் கழிப்பறை இன்றி அவதிப்படுகின்றனர். 

பரிசோதனை கூடத்திற்கு வரும் நோயாளிகளுக்கு சிறுநீர் பரிசோதனை செய்ய கழிப்பறைகள் இல்லாததால் ஆண் மற்றும் பெண்கள் ஒரே கழிப்பறைக்கு செல்லும் நிலை உள்ளது.

மருத்துவமனையின் எந்த வளாகத்திலும் குடிநீர் குழாய் கிடையாது. சில வார்டுகளில் பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் வைத்துள்ளனர். இது சுகாதாரமற்றதாக உள்ளது. பிரதான கட்டிடம் அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிகளும் அகற்றப்பட்டு விட்டன. அதனால் நோயாளிகள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நோயாளிகளுக்கு உதவியாளர்களாக உள்ளவர்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து குடிநீர் மற்றும் வெந்நீர் வாங்க செல்கின்றனர். 

ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கானோர் செல்வதால் கடைகள் மற்றும் ஓட்டல்களிலும் குடிநீர் தர மறுக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் வரும் மருத்துவமனையில் சிறிய சுத்திகரிப்பு நிலையம் அமைத்து குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கலாம். இல்லையேல் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் குடிநீர், வெந்நீர் இயந்திரங்களை அமைத்து கொடுக்கலாம். ஆஸ்பத்திரியில் குடிநீர் குழாய்கள் அமைத்து, நல்ல சுகாதாரமான குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment