Saturday, February 11, 2017
ராமநாதபுரத்தில் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம்!!
ராமநாதபுரம் ரயில்வே பீடர் சாலையில் உள்ள போக்கஸ் அகாதெமி
நிறுவனத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை, இரண்டாம் நிலைக் காவலர்
தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் தொடங்குகிறது.
இம்முகாமில் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள், நேர மேலாண்மை மற்றும் திட்டமிடுதல் குறித்து விளக்கம் அளிக்கப்படும். மேலும் தேர்வர்களுக்கு பாடக்குறிப்புகளும் வழங்கப்படுவதுடன், மாதிரித் தேர்வும் நடத்தப்படும்.
இப்பயிற்சி முகாமில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும்
துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு தேர்வுகள் குறித்து விளக்கமளிப்பார்கள்.
எனவே
தகுதியுள்ளவர்கள் தங்களது சுயவிவரங்களுடன் வலம்புரி மகாலில் செயல்பட்டு வரும்
போக்கஸ் அகாதெமி நிறுவனத்தில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும்
விவரங்களுக்கு 9159991214
மற்றும் 9842360361 என்ற செல்லிடப்பேசி
எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment