Thursday, June 15, 2017
பள்ளி அருகே குவிந்து கிடக்கும் குப்பையால் மாணவர்களுக்கு சுகாதாரக்கேடு!!
ராமநாதபுரத்தில் பள்ளி அருகே குவிந்து கிடக்கும் குப்பையால்
மாணவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சியில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியை ஒட்டி மாரியம்மன்கோயில் தெருவிற்கு செல்லும் பொது பாதை உள்ளது.
இந்த பாதை முழுவதும் குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டி சுகாதாரக்கேடு ஏற்படுத்தி உள்ளனர். பள்ளி வகுப்பை ஒட்டிய பகுதியாக இது அமைந்துள்ளதால் மாணவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. காற்றில் துர்நாற்றம் வகுப்பறைக்குள் வீசுகிறது.
மேலும், அவ்வப்போது குப்பைக்கு தீ
வைப்பதால் புகையால் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
தொடர்ந்து இப்பகுதியில் குப்பை கொட்டப்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மாணவர்களின் நலன் கருதி பள்ளி நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் இப்பகுதியில் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என பெற்றோர் தெரிவித்தனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment