(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 20, 2017

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஏடிஎம் சென்டர், கனவு நினைவேறுமா?!!

No comments :
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ஏடிஎம் சென்டர் அமைக்க வேண்டும் என பொதுநல அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் வழியாக சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு இருமார்க்கமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து ரயில்களும் மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரத்தில் நின்று செல்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. 

ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் பிளாட்பாரத்தின் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 2வது பிளாட்பாரத்திற்கு செல்லும் பயணிகள் வெகுதூரம் தங்கள் சுமந்து வரும் சுமைகளுடன் மேம்பாலத்தில் ஏறி அடுத்த பிளாட்பாரம் செல்ல வேண்டியுள்ளது. பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் ரயில் நிலையத்தின் மையப்பகுதியில் புதிய நடைமேம்பாலம் அமைக்க வேண்டும். 

இதுதவிர சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் பிற நகரங்களில் உள்ளது போல வங்கி ஏடிஎம் மையம் வசதி அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment