வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Tuesday, September 12, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பொருட்களின் தரம் குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்!!

No comments :
உணவு பொருட்களின் தரம் குறித்து புகார் அளிக்க புதிய வாட்ஸ் அப் எண் அறிமுகம்.

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உணவு பொருட்களின் தரம் குறித்து தொடர்ந்து பல்வேறு புகார் வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் உணவு பொருட்களின் தரம் குறித்து புகார் தெரிவிக்க புதிய வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில் கோடைகாலங்களில் விற்பனை செய்யப்படும் கார்பைடு கல்வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம்,தரமில்லாத குடிநீர் கேன்கள்,பால்,பால் பொருட்கள்,அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை
94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

செய்தி: திரு. தாஹீர், கீழை(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment