(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 30, 2017

ஏர்வாடி பெரிய கன்மாவை தூர் வார கோரிக்கை!!

No comments :

ஏர்வாடியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாராமல் உள்ள பெரிய கண்மாயை மழைநீரை தேக்க உடனே தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏர்வாடியில் பெரிய கண்மாய் உள்ளது. இக்கண்மாய் மற்றும் அதில் உள்ள கிணற்றால் ஏர்வாடிதொத்தன்மாவடிவெட்டமனைஅடஞ்சேரிசின்னஏர்வாடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கண்மாயை தூர்வாராமல் இருப்பதால் சிறிதளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேக்க முடியாத நிலையில், சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தேவைகளுக்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.


அதேபோல் இந்த கண்மாயில் உள்ள கிணறு 1936ம் வருடம் தோண்டப்பட்டு இன்று வரை வற்றாத கிணறாக உள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் சுத்தம் செய்யாமல் உள்ளதால், யாரும் பயன் படுத்துவதில்லை. ஆகவே இந்த கிணற்றையும் தூர்வாரினால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.

ஆகவே மாவட்ட நிர்வாகம் மழை கால தண்ணீரை தேக்க உடனே கண்மாயை தூர்வார வேண்டும் என்று கலெக்டருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment