(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 18, 2017

இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

No comments :
ராமநாதபுரட்த்தில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில் வியாபாரம் களை கட்டியது. மக்கள் கூட்டத்தால் கடைவீதிகள் நிரம்பி வழிந்தன.

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்த நிலையில், மக்கள் தீபாவளிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா, என்ற கேள்வி இருந்தது.


இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கூட்டம், அதிகரித்தது. தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று கிராமப்புற மக்கள் அதிகளவில் ராமநாதபுரம் வந்தனர். ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. தெருவோர கடைகளில், அறிவிக்கப்பட்ட சலுகை விற்பனை அறிவிப்பால் ஈர்க்கப்பட்ட மக்கள், அதிகளவில் கொள்முதல் செய்தனர்.

இதனால், ராமநாதபுரம் கடை வீதிகளில் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது.


வாசக நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment