(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, December 11, 2017

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை நீரை மலர் துாவி வைகை நீரை வரவேற்றார் கலெக்டர்!!

No comments :
வைகை அணையில் இருந்து நிலத்தடி நீர் ஆதாரத்திற்கென திறக்கப்பட்ட தண்ணீர், தொடர்ந்து பார்த்திபனுார் மதகு அணை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கலெக்டர் நடராஜன் திறந்து வைத்தார். இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியை கருத்தில் கொண்டு டிச., 5 ல் முதல்வர், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.

இதன் படி மாவட்ட பங்கீடான 12,400 கனஅடி நீர், முறையே முதல் 3 நாட்கள் 3 ஆயிரம் கனஅடி வீதமும், அடுத்தடுத்த நாட்களில் 2 ஆயிரம், 1000 மற்றும் 400 கனஅடி என திறக்கப்பட்டது. இது தொடர்ந்து
10 ம் தேதி வரை முறையாக திறக்கப்பட்டது.
இருப்பினும் கடந்த 2016 ஜன., மாதத்திற்கு பின் சுமார் 2ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் திறக்கப்பட்டதால், எதிர்பார்த்த நாளில் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் ஆற்றில் மணல் கொள்ளை, கருவேல ஆக்கிரமிப்பு என தடுப்பாக உள்ளன.



இதனையடுத்து முதல்வர் நேற்று மீண்டும் இரண்டு மாவட்டங்களுக்கும் சேர்த்து, 1720 கனஅடி கூடுதலாக திறக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பார்த்திபனுார் மதகு அணையை தண்ணீர் வந்தடைந்தது. தொடர்ந்து நேற்று காலை 10:00 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன்,
ஷட்டர்களை திறந்து வைத்து மலர் துாவி வைகை நீரை வரவேற்றார்.

இதன் படி மதகுகளில் மொத்தமுள்ள 25 ஷட்டர்களில் 4 தவிர 21 ஷட்டர்களும் திறக்கப்பட்டு தண்ணீர் வேகமாக ராமநாதபுரம் செல்லும் வகையில் முறைப்படுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வைகை அணையில் இருந்து மொத்தம் 14,120 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பார்த்திபனுாரில் இருந்து வினாடிக்கு 2,400 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
பரமக்குடி தாசில்தார் ஜெயமணி, பரமக்குடி கீழ்வைகை வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் செய்யதுஹபீப் மற்றும் உதவி பொறியாளர் கார்த்திக், வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் மதுரைவீரன், செயல்தலைவர் பால்மரியதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment