(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 7, 2018

தனுஷ்கோடி பகுதியில் பறவை வேட்டை; அகப்படுவோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் மற்றும் சிறை தண்டனை!!

No comments :
ராமேசுவரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ளது கோதண்டராமர் கோவில் கடல் பகுதி. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலும் ஆஸ்திரேலியாவில் இருந்து பிளமிங்கோ என்ற வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வருவது வழக்கம். ஆனால் இந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கியும் இதுவரை பிளமிங்கோ பறவைகள் வரவில்லை.

ஆனால் கோதண்டராமர் கோவில் கடல் பகுதி மற்றும் அரிச்சல்முனைகம்பிப்பாடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் கடல் காவா என்று அழைக்கப்படும் கடல் புறாக்கள் குவிந்துள்ளன. இதை தவிர உள்ளான் குருவிசெந்நாரைவெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பல பறவைகளும் அதிக அளவில் வந்துள்ளன. இந்தநிலையில் கடல் காவா உள்ளிட்ட பறவைகளை மர்ம நபர்கள் சிலர் வேட்டையாடி வருவதாக தகவல் கிடைத்தது.




இதையொட்டி பறவைகளை வேட்டையாடுவதை தடுக்கும் வகையில் மண்டபம் வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் கோதண்டராமர் கோவில் கடற்கரை முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரை கடற்கரை பகுதியில் பறவைகளை வேட்டையாட கன்னி வலைகள் ஏதும் புதைத்து வைக்கப் பட்டுள்ளனவா என்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனச்சரகர் கூறியதாவது:- பறவைகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். தனுஷ்கோடி பகுதியில் சுற்றித் திரியும் பறவைளை சிலர் வேட்டையாடுவதாக தகவல் வந்துள்ளது. பறவைகளை வேட்டையாடினால் ரூ.25ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, சிறை தண்டனையும் அனுபவிக்க நேரிடும். பறவைகளை வேட்டையாடும் நபர்களை கண்டால் வனத்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளோம்.

கடந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யாததாலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் பிளமிங்கோ பறவைகள் இது வரை வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment