(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, July 11, 2018

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாலை நேர வகுப்புகள்; ஜூலை 9 முதல் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
முதுகுளத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாலை நேர வகுப்புகளில் சேர திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து பயிற்சி நிலைய முதல்வர் சீராளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதுகுளத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாலை நேர குறுகிய கால தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதில் ஃபிட்டிங், வெல்டர், எலக்ட்ரீசியன் பிரிவுகள் உள்ளன. பயிற்சியானது மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், வார இறுதி நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெறும்.

பயிற்சிக்கு வந்து செல்ல தினமும் ரூ.100 வழங்கப்படும்.

பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ், வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

இதில் சேர, குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ், சாதி, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் 2 நகல்கள், 3 புகைப்படத்துடன் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நேரில் விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment