(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 19, 2019

கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம், விவசாயிகள் விண்ணபிக்கலாம்!!

No comments :
மத்திய அரசு விவசாயிகளை ஊக்குவித்திடும் வகையில் 5 ஏக்கர் வரை சாகுபடி செய்து கொண்டிருக்கிற நிலத்தின் நேரடி பட்டாதாரர்களாக உள்ள விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த ஊக்கத்தொகையானது 3 தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது 
ஆதார் எண்
வங்கி கணக்கு எண்
செல்பேசி எண்
பட்டா நகல் எண் 

உள்ளிட்ட விவரங்களை உரிய விண்ணப்பத்துடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்து பயனடையலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 400 வருவாய் கிராமங்களிலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மூலம் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் மூலமாக இப்பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருவாய் கிராமங்கள் வாரியாக தகுதியான பயனாளிகளின் விவரப்பட்டியல் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை பொதுமக்கள் நேரில் பார்த்து அறிந்து கொள்ளலாம். இதில் விடுபட்டுள்ள தகுதியான விவசாயிகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இத்திட்டத்தின் கீழ் பயனடைய உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment