(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 5, 2019

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு; கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்!!

No comments :
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தரிடம் கூடுதல் கட்டணம்வசூலித்தனர்.
தை அமாவாசையான நேற்று ஒரு லட்சம் பக்தர்கள் ராமேஸ்வரம்
ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர்.

பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி பூஜை செய்து கடலில் புனித நீராடினார்கள்.

பக்தர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு தேங்காய், இரு சிறிய வாழைபழம், 2 ரூபாய் மதிப்புள்ள ஊதுபத்தி (இதன் அடக்கம் ரூபாய் 30) அடங்கிய பூஜை பொருள்களை பக்தரிடம் 60 ரூபாய்க்கு வியாபாரிகள் விற்றனர்.



மேலும் அக்னி தீர்த்த கரையில் உள்ளூர் புரோகிதர்கள் அனுமதியுடன் வெளியூரை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பூசாரிகள் பூஜை செய்தனர். இவர்கள் திதி, தர்பணம் பூஜைக்கு நிர்ணயித்த (ரூபாய் 400 முதல் 500 வரை) கட்டணத்தை விட ஒரு பக்தர் குடும்பத்திடம் 1000 முதல் 1500 ரூபாய் வரை வசூலித்தனர்.

அக்னி தீர்த்த கரையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து கடந்த சில மாதம் முன்பு நீதித்துறை, மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் பக்தரிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டனத்திற்குரியது என பக்தர்கள் தெரிவித்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment