(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 23, 2019

ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி சட்டப்பேரவை இடைத் தேர்தல் வேட்பாளராக எஸ்.சம்பத்குமாரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளராக கே.நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர்.




கேணிக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மைதீன் பேசுகையில், தமிழகத்தில்தான் பாஜகவுக்கு எதிராக முக்கிய கட்சிகள் இணைக்கப்பட்டு பலமான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.


கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, மார்க்சிஸ்ட் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி, அதன் மாவட்டச் செயலர் காசிநாத்துரை, காங்கிரஸ் பிரமுகர் தெய்வேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முருகவேல், திமுக இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, திமுக முன்னாள் மாவட்டச் செயலர் சுப.த. திவாகரன், விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி கலைவேந்தன், பவானி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக திமுக நகரச் செயலர் கார்மேகம் வரவேற்றார்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment