(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, August 14, 2019

ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் மாற்றம்; புதிய கமிஷனராக திரு. விஸ்வநாதன் நியமனம்!!

No comments :

ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் சுப்பையா நேற்று திடீரென மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கோவை மாநகராட்சி பயிற்சி மைய அதிகாரி விஸ்வநாதன் ராமநாதபுரம் நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை திருநகரை சேர்ந்தவர் சுப்பையா. இவர் உசிலம்பட்டி நகராட்சி கமிஷனராக இருந்த போது கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவர் கமிஷனராக பதயேற்ற போது முதல்நிலை நகராட்சியாக இருந்த ராமநாதபுரம் நகராட்சி 60 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது.தரம் உயர்த்தப்பட்ட ராமநாதபுரம் நகராட்சிக்கு தகுதியான நிலையில் புதிய கமிஷனர் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது.இந்நிலையில், நகராட்சி பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றாதது, பஸ்ஸ்டாண்டில் கடைகளை வாடகைக்கு விட்டது. சில கட்சியினர் நகராட்சி ஆணையர் சுப்பையாவை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டியது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் நகராட்சி ஆணையர் சுப்பையா விமர்சிக்கப்பட்டார்.


இந்நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் சுப்பையா இடம் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி பயிற்சி மைய அதிகாரி விஸ்வநாதன் ராமநாதபுரம் நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

No comments :

Post a Comment