(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 31, 2019

ராமநாதபுர மாவட்டத்தில் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து "வாட்ஸ்–அப்" -ல் புகார் தெரிவிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் நகரசபை ஆணையாளர் விஸ்வநாதன் கூறியதாவது:–

ராமநாதபுரத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. இந்த மழைநீர் பல பகுதிகளில் தேங்கி நிற்பதாக புகார் வந்து உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரில் 3 இடங்களில் தூர்ந்து காணாமல் போன வடிகால்களை கண்டுபிடித்து அதன்வழியாக மழைநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகள் பயன்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகள், மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆண்டுதோறும் நகரசபை பொறியியல் பிரிவினர் கணக்கெடுத்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ராமநாதபுரம் நகரசபை பகுதியில் அதுபோன்ற ஆழ்துளை கிணறுகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.



இதுதவிர, நகராட்சி எல்லை பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் திறந்த நிலையில் ஆபத்தான முறையில் இருப்பது தெரிந்தால் பொதுமக்கள் எனது செல்போன் வாட்ஸ்–அப் 7397382164 எண்ணுக்கு அதனை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ எடுத்து அனுப்பினால் 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து சரிசெய்யப்படும். மேலும். பாதாள சாக்கடை மூடிகள் உடைந்திருந்தாலோ, திறந்திருந்தாலோ இதே எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைகாலம் என்பதால் மழைக்கால தொற்று நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்கும் வகையில் குடிநீரை குளோரினேசன் செய்து சுத்தமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் மழைநீர் செல்லமுடியாத அளவிற்கு வடிகால்கள் பலகாலமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி கடும்நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment