(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 24, 2019

ராமநாதபுரத்தில் டிசம்பா் 2 ஆம் தேதி முதல் பெண்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி!!

No comments :
ராமநாதபுரத்தில் பெண்களுக்கு இலவச வேலைவாய்ப்புக்கான பயிற்சி வரும் டிசம்பா் 2 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து இந்தியவன் ஓவா்சீஸ் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு-

ராமநாதபுரத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில் பெண்களுக்கான எம்ப்ராய்டரி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

வரும் டிசம்பா் 2 ஆம் தேதி முதல் தினமும் காலை 9.30 மணிக்கு பயிற்சிகள் தொடங்கப்படவுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டும் நடத்தப்படவுள்ள பயிற்சியானது புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பூமாலை வணிக வளாகத்தில் உள்ள வங்கியின் சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன அலுவலகத்திற்கு வந்து விளக்கம் பெறலாம்.பயிற்சியில் சேருவோருக்கு18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்கவேண்டும். பயிற்சி முடித்தவா்களுக்கு அரசு சான்றுகள் வழங்கப்படும். பயிறசியின் போது மதிய உணவு, தேநீா், பயிற்சிக்கான உபகரணங்கள் என அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படவுள்ளன. கிராமப்புற பெண்களுக்கு பதிவு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.


பயிற்சியில் சேர விரும்புவோா் மேலும் விவரங்களுக்கு 04567-221612 என்ற தொலைபேசியில் தொடா்புகொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment