(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, October 6, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா குறைகிறது, மக்கள் மகிழ்ச்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு செப்டம்பர் முதல் குறைந்து தற்போது ஒற்றை இலக்கத்திற்கு வந்துள்ளது.

 

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் மே, ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்தது.சுகாதாரத்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளால் தற்போதைய நிலையில் தொற்று எண்ணிக்கை பத்துக்கும் குறைவாக உள்ளது.


மாவட்டத்தில் இதுவரை 5629 பேர் பாதிக்கப்பட்டதில் 5346 பேர் குணமடைந்துள்ளனர். 120 பேர் பலியாகினர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் 14 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

 


 

ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் கூறியதாவது:மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், 11 ஒன்றியங்களில் தலா இரண்டு வீதம் 22 நடமாடும் பரிசோதனை முகாம் மூலம் தினமும் 850 முதல் 900 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.இதில் ஒற்றை இலக்கத்தில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை உள்ளது. 


மாவட்டத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது.ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் வெளிநாட்டு பக்தர்களுக்கு அங்குள்ள சோதனை சாவடியில் மருத்துவக் குழுவினர் கொரோனா பரிசோதனை செய்கின்றனர். தினமும் குறைந்தது 40 பரிசோதனை நடக்கிறது, என்றார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment