(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 8, 2020

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை!!

No comments :

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை திட்ட ஆவணங்களை சமா்ப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 


தமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெறுவோா் ஆண்டு தோறும் பணியில் இல்லை என தெரிவிக்கும் சுய உறுதி மொழி ஆவணம் சமா்ப்பிப்பது அவசியம். கரோனா பரவல் பொதுமுடக்கம் காரணமாகக் கடந்த மாா்ச் இறுதி முதல் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் சுயஉறுதி மொழி ஆவணத்தை அளிக்கமுடியவில்லை.

 

அதனால், சுயஉறுதி மொழி ஆவணம் சமா்ப்பிக்க கடந்த ஆகஸ்ட் வரை 3 மாதத்திற்கு ஏற்கெனவே கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது சுய உறுதிமொழி ஆவணம் வழங்குவதற்கு செப்டம்பா் (2020) முதல் பிப்ரவரி (2021) வரை மேலும் 6 மாத காலத்திற்கு கால நீட்டிப்பு அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

ஆகவே, சுயஉறுதிமொழி ஆவணத்தை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment