(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 27, 2021

இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள

62 மெட்ரிக் பள்ளிகளில் 1043 இடங்கள்,

90 நர்சரி தொடக்க பள்ளிகளில் 841,

2 சுயநிதி பள்ளிகளில் 16

 

என மொத்தம் 1900 இடங்களுக்கு அரசின் இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி., 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் ஜூலை 5-ந்தேதி முதல் ஆகஸ்டு 3-ந்தேதி வரை இணைய வாயிலாக சேர்க்கை நடைபெற உள்ளது. ஜூலை 3-ல் இடஒதுக்கீடு அனுமதிக்கப்பட்ட இடங்கள் குறித்த விவரம் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

 


ஜூலை 5-ந்தேதி முதல் ஆகஸ்டு 3-ந்தேதி வரை www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப் பிக்கலாம்.ஆகஸ்டு மாதம் 9-ல் தகுதி வாய்ந்த மாணவர் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்டு 10-ல் இட ஒதுக்கீட்டிற்கு மேல் கூடுதலாக விண்ணப்பங்கள் இருந்தால் குலுக்கல் நடைபெறும். முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த வட்டார வள மைய அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

 

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்து உள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment