(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 2, 2021

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்வதற்கு சிறப்பு முகாம்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் சங்கர்லால் குமாவத் வெளியிட்டார்.



இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சங்கர்லால் குமாவத் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

 

இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 5 லட்சத்து 77 ஆயிரத்து 750 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 84 ஆயிரத்து 47 பெண் வாக்காளர்களும், 62 மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களும் ஆக மொத்தம் 11 லட்சத்து 61 ஆயிரத்து 859 பேர் வாக்காளர்களாக உள்ளனர். 

 

இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 5 லட்சத்து 79 ஆயிரத்து 908 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 85 ஆயிரத்து 189 பெண் வாக்காளர்களும், 63 மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களும் ஆக மொத்தம் 11 லட்சத்து 65 ஆயிரத்து 160 பேர் வாக்காளர்களாக இருந்தனர். 

 


இதன் பின்னர் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 2 ஆயிரத்து 145 ஆண் வாக்காளர்களும், 2 ஆயிரத்து 351 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 4 ஆயிரத்து 499 நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



இதே காலத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 4 ஆயிரத்து 303 ஆண் வாக்காளர்களும், 3 ஆயிரத்து 493 பெண் வாக்காளர்களும், 4 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 7 ஆயிரத்து 800 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த வாக்காளர் பட்டியல் வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார்கள், நகராட்சி அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் இளம் வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்காகவும், தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் நீக்கம் செய்வதற்கும் எதிர்வரும் 13 மற்றும் 14, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

 

இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.



(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment