Wednesday, March 30, 2022
போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர்!!
மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையம்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்,
ரயில்வே தேர்வுவாரியம்,
பணியாளர் தேர்வு குழுமம்,
வங்கி பணியாளர் சேவைகள் குழுமம்
உள்ளிட்ட பல்வேறு மத்திய மற்றும் மாநில பணிகளுக்கான
போட்டி தேர்வுகளுக்காக தயாராகி கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் போட்டித்தேர்வு
பயிற்சி வகுப்புகள் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கிராமப்புறத்தில்
இருந்து நகரத்திற்கு வந்து பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாத சூழலில் உள்ளவர்கள்,
தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டே அரசுப்பணிக்கு தயார்படுத்தி கொள்ளும் இளைஞர்கள்
தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தவாறே தங்களை தயார் செய்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
கல்வி
தொலைக்காட்சியில் போட்டி தேர்வுக்கான பாட வகுப்புகளின் ஒளிபரப்பு தமிழக முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தநிகழ்ச்சி
தினந்தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், இதன் மறு ஒளிபரப்பு அன்றைய தினம் இரவு
7 மணி முதல் 9 மணி வரையும் ஒளிபரப்பாகிறது.
போட்டி
தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களும் கல்வி தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சியினை
கண்டு பயன் பெறுமாறு ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
No comments :
Post a Comment