(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 22, 2022

ராமநாதபுரம் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில், பொதுவான பொறியியல் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜோ. ஜெகன் செவ்வாய்க்கிழமை விடுத்தள செய்திக் குறிப்பு:

 

ராமநாதபுரம்-தேவிபட்டினம் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில், பொறியியல் பட்டப்படிப்பில் சேருவோர் விண்ணப்பிக்கும் வகையில் இணையதள சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 


தமிழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவோருக்காக அமைக்கப்பட்ட 110 மையங்களில், இக்கல்லூரி வளாக மையமும் ஒன்றாகும். எனவே, இக்கல்லூரி வளாகத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி, தினமும் காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.

 

விண்ணப்பிக்க விரும்புவோர், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து கல்லூரிக்கு நேரில் வரவேண்டும். உரிய அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment