(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, December 26, 2015

ராமநாதபுரம் - கீழக்கரை சாலையில் தோட்டக்கலைக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெறுகிறது!!

No comments :
ராமநாதபுரம் அருகே ஐந்திணை மரபணுப் பூங்காவில் தோட்டக்கலைக் கண்காட்சியை தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
அச்சடிப்பிரம்பு கிராமத்தில் உள்ள மரபணுப் பூங்காவில், தோட்டக் கலைத்துறையால் நடத்தப்படும் இக்கண்காட்சியில் காய்கறிகள், மலர்களில் பல்வேறு சிற்பங்களை வடிவமைத்து பார்வைக்கு வைத்துள்ளனர்.

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, விநாயகர், ஏசுநாதர், வாத்து, முயல், கொக்கு, ஆமை, கோழி, சேவல், யானை, டைனோசர், டால்பின், வண்ணத்துப்பூச்சி, பனிக்கரடி உள்ளிட்ட சிற்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், பல்வேறு வகையான ரோஜாப் பூக்கள், பிளாஸ்டிக் போன்ற இயற்கைப் பூக்களான ஹெலிகோனியா, காட்டுப்பூக்களான உலர்மலர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட மலர் வகைகளும் கண்காட்சியில் உள்ளன.
இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.  திறப்பு விழாவில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.சுந்தரபாண்டியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ச.தமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி இயக்குநர் இளங்கோவன் வரவேற்று பேசினார். கண்காட்சி ஏற்பாடுகளை பூங்கா அலுவலர் அழகேசன் தலைமையிலான அதிகாரிகள் செய்திருந்தனர்.வெறும் மூன்று நாட்கள் என்பதனை மறுபரிசீலனை செய்து விடுமுறை நாட்கள் அதிகமிருப்பதால் மாவட்ட மக்கள் அனைவரும் கண்டுகளிக்கும் வண்ணமாக இன்னும் ஒரு வாரக் காலம் நீட்டித்து தர மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

செய்தி: திரு. ஷேக் அப்துல்லாஹ், இராமநாதபுரம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment