(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 16, 2015

ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக வெற்றி

No comments :
ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு வித்தியாசத்தை முறியடித்து வெற்றி பெற்றுள்ளார் இடைத்தேர்தல் வேட்பாளர் வளர்மதி. 2011 சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 1,05,328 வாக்குகள் பெற்றார். தற்போதையே இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதி 1,51,561 ஆகும். இது ஜெயலலிதா வாங்கியதை விட 46,233 வாக்குகள் அதிகமாகும். கடந்த தேர்தலில் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில், 41,488 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆனந்த்தை வீழ்த்தியிருந்தார். இந்தத் தேர்தலில் வளர்மதி, ஆனந்த்தை 96,515 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


எனவே இரண்டு வகையிலும் ஜெயலலிதாவை முந்தி சாதனை படைத்துள்ளார் வளர்மதி. சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகளுக்கு அதிகமாக சிறைதண்டனை வழங்கப்பட்ட காரணத்தினால், தேர்தல் விதிகளின்படி தன்னுடைய பதவியை இழந்தார் ஜெயலலிதா. இதனையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்கான இடைத்தேர்தல் கடந்த 13 ஆம் தேதியன்று நடைபெற்று, வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் 1,51561 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி பெற்றுள்ளார்.

No comments :

Post a Comment