(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 19, 2015

சுற்றுச்சூழல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

No comments :
சுற்றுச்சூழல் விருது பெற தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற் றும் மேலாண்மை பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாகப் பணி யாற்றி வரும் கல்வி நிறுவனங் கள், தனி நபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பில் 2014-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் விருது கள் வழங்கப்பட உள்ளது.


சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு விருதுக்கு சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்பு ணர்வில் சிறந்து விளங் கும் கல்வி நிறுவனங்கள், கல் வியாளர்கள் மற்றும் தனி நபர் களும், சுற்றுச்சூழல் பாது காப்பு மற்றும் மேலாண்மை விருதுக்கு சுற்றுச்சூழல் பாது காப்பு மற்றும் மேலாண்மை யில் சிறந்து விளங்கும் தனி நபர்கள், சுற்றுச்சூழல் பாது காப்பு மற்றும் மேலாண்மை யில் சிறந்து விளங்கும் நிறுவ னங்கள் ஆகியோரும் தகுதி யுடையவர்கள்.

விண்ணப்பதாரர் தனி நப ராக இருப்பின் 18 வயது நிரம் பியவராக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவில் தனி நபர் மற்றும் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். கடந்த 3 ஆண்டுகளில் தனிநபர், நிறுவனம் செய்த பணிகள் மட்டுமே விண்ணப்பத்தில் இடம் பெற வேண்டும். சுற் றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவின் கீழ் அறிவிக்கையில் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்த பணி களை மட்டும் நிறுவனங்கள் சமர்ப்பிக்கலாம்.

தனி நபராக இருப்பின் தமிழக அரசால் வேறு எந்த விருதுகளுக்கும் அனுப்பப் படாத பணிகளின் விவரம், அவற்றின் பயன் மற்றும் விவரங்களை அறிக்கையு டன் இணைத்தல் வேண்டும். தனிநபர் எந்த நிறுவனத்திலும் பணிபுரிபவராக இருத்தல் கூடாது. ஆனால் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் தனி நபர் செய்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து விண் ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பிரிவில் விண்ணப்பிக்கக்கூடிய தனி நபர், நிறுவனம் அறிவிக்கை யில் குறிப்பிட்ட காலகட்டத் தில் மேற்கொண்ட களப்பணி மற்றும் அதைச்சார்ந்த பிரசு ரங்கள், பத்திரிக்கை குறிப்பு கள், திட்ட அறிக்கைகள், அத னால் ஏற்பட்ட பயன்பாடு, பயனாளிகள், பங்கு பெற் றோர் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இடம்பெற வேண் டும். களப்பணியை சம்பந்தப் பட்ட துறையின் அதிகாரிகள், தேர்வுக் குழுவினர் தணிக்கை செய்வார்கள். ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே தனி நபர், நிறுவனம் விண்ணப்பிக்க லாம். மூன்று பிரிவுக்கும் அப்பிரிவின் எதிரே குறிப்பிட் டுள்ள தகுதியுள்ள தமிழ் நாட் டைச்சார்ந்த நபர்கள், நிறு வனங்கள் மட்டுமே விண் ணப்பிக்க வேண்டும்.

மூன்று பிரிவுகளில் ஒவ் வொரு பிரிவிற்கும் என உள்ள தனித்தனி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண் டும். ஏற்கனவே சுற்றுச்சூழல் துறையால் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மீண்டும் விரு துகள் பெற விண்ணப்பிக்க இயலாது. பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பம் 6 நகல்க ளில் இயக்குநர், சுற்றுச்சூழல் துறைக்கான கேட்பு காசோலையுடன் 3 புகைப் படங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களை இயக்குநர், சுற்றுச்சூழல் துறை, தரை தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை -15 என்ற முகவரியில் அனைத்து பணி நாட்களிலும் வருகிற 25.02.2015 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெற் றுக் கொள்ளலாம். மேலும் இதற்கான விண்ணப்பத் தினை இத்துறையின் ஷ்ஷ்ஷ்.மீஸீஸ்வீக்ஷீஷீஸீனீமீஸீ௴.௴ஸீ.ஸீவீநீ.வீஸீ என்ற வலைதளத்தில் இருந்தும் படியிறக்கம் செய்து கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 27-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் நந்தகுமார் தெரி வித்தார்.


செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment