(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 18, 2015

உச்சிப்புள்ளி யூனியன் அலுவலகம் முன்பு அரசு பஸ்கள் நின்று செல்லும்

No comments :
உச்சிப்புள்ளியில் உள்ள யூனியன் அலுவலகம் முன்பு அரசு பஸ்கள் நின்று செல்ல உடனடி நடவடிக்கை மேற் கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு யூனியன் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

யூனியன் கூட்டம்

மண்டபம் யூனியன் கூட் டம் அதன் தலைவர் முனியம் மாள் முனியசாமி தலைமை யில் நடைபெற்றது. ஆணை யாளர் சித்ரவேல், கூடுதல் ஆணையாளர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித் தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச் செல்வன் வரவு-செலவு, திட்டப்பணிகள் குறித்து அறிக்கை வாசித்தார். அதனை தொடர்ந்து கவுன்சிலர்களி டையே நடைபெற்ற விவாதம் வருமாறு:-

ஜோதிர் முனியசாமி:- இரு மேனி பகுதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்துக்கு பணிகள் முடிந்தும் மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. உடனே மின் இணைப்பு வழங்க நடவ டிக்கை எடுக்கவேண்டும்.

தலைவர்:- இதுகுறித்து நேர டியாக பார்வையிட்டு சம்பந் தப்பட்ட ஊராட்சி தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்கப் படும்.

உச்சிப்புளி ராஜேந்திரன்:- யூனியன் அலுவலகத்திற்கு முன்பு உள்ள கல்கிணற்று வலசை பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல பல முறை யூனியன் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இது குறித்து உச்சிப்புளி பகுதிக்கு வந்த போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்னாள் சேமிப்பு கிடங்கு வாரிய தலைவர் முனியசாமி யும், நானும் கோரிக்கை விடுத்தோம். எங்களின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், மாணவ-மாணவிகள் நலன் கருதி பஸ்கள் நின்று செல்ல உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இதற்கு நன்றி தெரி வித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தலைவர், ஆணையாளர்:- நீண்ட காலமாக இருந்து வந்த இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு கண்ட அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

ஜீவானந்தம்:- அழகன் குளம் பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை உடனே முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்ஜினீயர்:- பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப் படும்.


பாராட்டு

டிக்ரோஸ்:- தங்கச்சிமடம் பகுதியில் அரசு விலையில்லா கிரைண்டர், மிக்சி வழங்கப் படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களிடம் அதிருப்தியாக உள்ளது. எனவே இந்த விலையில்லா பொருட்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர்:- இன்னும் 15 நாட்களில் அமைச்சர் நேரடியாக உங்கள் பகுதிக்கு வந்து விலையில்லா பொருட்களை வழங்குவார். மண்டபம் யூனி யன் பகுதியில் வழங்கப்படாத இடங்களுக்கு படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப் படும்.

ஜி.முனியசாமி:- அ.தி.மு.க. அரசு மக்கள் நலத்திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தி வருகிறது. கவுன்சிலர்கள் மக் களுக்கு ஆற்ற வேண்டிய பணி களை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். நீண்டகாலமாக யூனியன் அலுவலகம் முன்பு கல்கிணற்றுவலசை பஸ் நிறுத் தத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தற்போது போக்குவரத்து அமைச்சர் செந்தில்பாலாஜி மூலம் தீர்வு காணப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும் தெரி வித்து கொள்கிறேன்.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.



கூட்டத்தில் மேலாளர் சுதாகர், யூனியன் என்ஜினீயர் கள் பாலகிருஷ்ணன், ஹேமா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேசுவரி, சீனி, யூனியன் துணை தலைவர் நாகேசுவரி சண்முகவேல், கவுன்சிலர்கள் சவுந்திர வள்ளி, மாணிக்கம்மாள், முரு கானந்தம், வேலுச்சாமி, சாந்தி தனபாலன், கமலா, செல்வி ராஜேந்திரன், கானிதாபானு தர்வேஸ், கற்பகவள்ளி சந் திரன், அன்வர்தீன், முனீசுவ ரன், அந்தோனிசாமி, செய் யது ராபீகா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில் வருகிற 31-ந்தேதி பணி ஓய்வு பெறும் மண்டபம் யூனி யன் ஆணையாளர் சித்ரவே லுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment