Thursday, March 26, 2015
துபாய்-மதுரை மற்றும் துபாய்-திருச்சி விமான நேரங்களில் மாற்றம்!!
தினசரி சேவையாக துபாய் - மதுரை இடையே
இயக்கப்பட்டு வரும் SG24 எண் விமானம் வரும் மார்ச் 29ம் தேதி முதல் காலை 11:00 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்டு மாலை 16:40 மணிக்கு மதுரை சென்றடையும்.
பின்னர் இரவு 19:10 மணிக்கு SG23 விமானம் மதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 22:05 மணிக்கு துபாய் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல்,
கோடைகாலத்தையொட்டி பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும்
வகையில் துபாய் - திருச்சி விமான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
வரும் மார்ச் 29ம் தேதி முதல் மாலை 18:25 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 00:05
மணிக்கு திருச்சி சென்றடையும் பின்னர்
நள்ளிரவு 00:55 மணிக்கு
திருச்சியிலிருந்து புறப்பட்டு அதிகாலை 03:45 மணிக்கு துபாய் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments :
Post a Comment