(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 25, 2015

கீழக்கரையில் வாகன விபத்து. ஒருவர் படுகாயம்!!

No comments :
கீழக்கரை அருகே முனிஸ்வரன் கோவில் சாலையின் வளைவில் கீழக்கரையிருந்து ராமநாதபுரம் சென்ற இருசக்கர வாகனமும் அதேபோலே  ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை நோக்கி வந்த மற்றொரு பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் வாகனத்தில் வந்தவர்கள் காயமடைந்தனர் இதில் ஒருவரை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கும் மற்ற இருவரும் பலத்த காயமடைந்ததால் ராமநாதபுரம் அரசுமருத்துவமனைக்கும் சேர்க்கப்பட்டனர்.


கீழக்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இந்த மூவரும் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது .வடக்குதெருவை சேர்ந்த ஜலால் மற்றொருவர்  கிழக்குதெரு அப்சர் , கிழக்குதெரு பட்டனி அப்பா பகுதியை சேர்ந்த மீராசாகிபு  எனத் தெரிந்தது.மீராசாகிபு என்பவர் பலத்த காயமடைந்ததால் மதுரை கொண்டு சென்றுள்ளனர்.


செய்தி: கீழக்கரை நகர் நல இயக்கம்

No comments :

Post a Comment