(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 27, 2015

கீழக்கரையில் ”ஆட்டோ டிரைவரை” பாட்டிலால் குத்தியவர்கள் கைது!!

No comments :கீழக்கரையில் ஆட்டோ ஓட்டுநரை பாட்டிலால் குத்திய 3 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கீழக்கரை புதுகிழக்குத் தெருவைச் சேர்ந்த செய்யது முஹம்மதுகபீர் மகன் அபூபக்கர்சித்தீக்(40). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும் கீழக்கரையை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அபூபக்கர்சித்தீக் தனது ஆட்டோவுக்கு பெட்ரோல் போடுவதற்காக பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்துள்ளார்.அப்போது அவரை கீழக்கரை ஜின்னாதெருவைச் சேர்ந்த நல்லஇபுராகீம் மகன் சாகுல்ஹமீது (35), உமையனபுரம் தோப்புக்காடு பகுதியை சேர்ந்த பூமிநாதன் மகன் முருகன்(32), வண்ணார்தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜா(29) ஆகிய மூவரும் வழிமறித்து பாட்டிலால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அபுபக்கர்சித்தீக் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.

செய்தி: தினமணி


No comments :

Post a Comment