(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, May 2, 2015

62+ சுங்கச்சாவடிகள் மூடப்படுகிறது. பிரயாணிகள் மகிழ்ச்சி!!

No comments :


நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைகளில் முதல் மீதான செலவை அரசு மீட்டுவிட்டதால் (சுங்கக் கட்டணம் வாயிலாக) பொது நலன் கருதி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு நெடுஞ்சாலைகளில் உள்ள 62-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை மத்திய அரசு மூடிவிட்டதாக மக்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத்துறை மந்திரி (தனிப்பொறுப்பு) பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

2012-ம் ஆண்டிலிருந்து இதுவரை சுங்கக் கட்டணம் வாயிலாக ஈட்டப்பட்டுள்ள வருவாய் குறித்து அவர் வெளியிட்ட விபரம் பின்வருமாறு:-
2012-13 (ரூ.9283.23 கோடி)
2013-14 (
ரூ.11,436.59 கோடி)
2014-15 (
ரூ.14,214.48 கோடி)


மேற்கண்ட வருமானத்தின் வாயிலாக முதல் மீதான செலவை அரசு ஈட்டிவி்ட்டதால் ஆந்திர பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடீசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள 62-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை மூடிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும், ஏற்கனவே, அந்த சுங்கச்சாவடிகளில் வழங்கப்பட்டு வந்த சாலை பயன்பாட்டாளர்களுக்கான சேவைகளை புதிதாக பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக தொடரவும் அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக, வாகனங்களுக்கான சுங்கக் கட்டணங்கள், அவசர உதவி எண்கள் போன்ற தகவல்களை இந்த இணையதளத்தில் பெறலாம்.


No comments :

Post a Comment