(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, May 3, 2015

பேராசிரியர் எம்.ஹெச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்களுக்கு "காயிதேமில்லத் பிறை" விருது!!

No comments :
விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழா 02 .05.2015 மாலை நடைபெற்றது.

சென்னை பெரியார் திடலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மனிதநேயமக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்களுக்கு காயிதே மில்லத் விருது வழங்கி சிறப்பிக்கபட்டார்.

ஒவ்வோர் ஆண்டும் இவ்விருதுகள், சமூகம், அரசியல், பண்பாட்டுத் தளங்களில் சிறப்பாகப் பணியாற்றும் சான்றோர் ஆறு பேரை அடையாளம் கண்டு வழங்கப்படுகிறது.அந்த வகையில், இந்த வருடத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டது.


இதில் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் எம்.ஹெச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்களுக்கு (காயிதேமில்லத்பிறை), விருதும், எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களுக்கு (அம்பேத்கர்சுடர்) விருதும் , கோவை கு.இராமகிருட்டிணன் அவர்களுக்கு (பெரியார்ஒளி)-விருதும், முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கு (அயோத்திதாசர்ஆதவன்), விருதும்-அமரர் ஜி.கே.மூப்பனார் அவர்களுக்கு (காமராசர்கதிர்), விருதும்-முனைவர் ஔவை நடராசன் அவர்களுக்கு (செம்மொழிஞாயிறு) விருதும் வழங்கப்பட்டது. இந்த விருதுகள் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவனால் வழங்கப்பட்டது.


வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் மேற்கண்ட 6 நபர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .

இந்நிகழ்விற்க்கு பேராசிரியர் உடன் தமுமுக மாநிப்பொதுச்செயலாளார் காஞ்சி ப அப்துல்சமது, மாநில துணைத்தலைவர் குணங்குடி அனிபா மற்றும் தமுமுக மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட தமுமுக மமக கழக சொந்தங்கள் ஏரளமானோர் கலந்து கொண்டனர்.


செய்தி: விகளத்தூர் நியூஸ்

No comments :

Post a Comment