(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, May 4, 2015

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்!!

No comments :
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது. 


விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 25, பதிவுக் கட்டணம் ரூபாய் 2 என மொத்தம் ரூபாய் 27 செலுத்தி விண்ணப்பத்தை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். 
எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூபாய் 2 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 
இந்தக் கல்லூரிகளில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. 
பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இம்முறை முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

No comments :

Post a Comment