(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 21, 2015

பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!!

No comments :
பாம்பன் மற்றும் ராமேசுவரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருவதால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

 ஒடிசா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் பாம்பன், ராமேசுவரம் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது.

 இதையடுத்து சனிக்கிழமை இரவு பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

எனவே மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க வேண்டாம் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என துறைமுக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


No comments :

Post a Comment