(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 21, 2015

கீழக்கரை அனைத்து கட்சி கூட்டம் - வியாழக்கிழமை (ஜூன் 25) நகராட்சி முன் மக்கள் திரள் போராட்டம்!!

No comments :
கீழக்கரையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்  ஹூசைனியா மகாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நகராட்சி ஆணையரை மாற்ற முயற்சி மேற்கொண்டு வருவதைக் கண்டித்து இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஹமீதுகான், கே.ஆர்.டி.கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. சார்பில் கென்னடி, சாகுல்ஹமீது, கம்யூ.,சிபிஎம்., மகாலிங்கம், வரகுணசேகரன், த.மு.மு.க. சார்பில் முஹம்மது சிராஜூதீன், இக்பால், எஸ்.டி.பி.ஐ.கட்சி சித்தீக், காதர், விடுதலைசிறுத்தைகள் கட்சி ரகுமான், அற்புதக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


வியாழக்கிழமை (ஜூன் 25) நகராட்சி முன் மக்கள் திரள் போராட்டம் நடைபெற்றது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கானஏற்பாடுகளை ஹாஜா நஜிமுதீன், காதர் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தி: திரு,. தாஹிர், கீழக்கரை

No comments :

Post a Comment