(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, June 23, 2015

ராமநாதபுரத்தில் நாளை (ஜூன் 24) தேசிய தடகளப் போட்டிக்கான மாணவ-மாணவியர் தேர்வு!!

No comments :
ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில் தேசிய தடகளப் போட்டிக்கான மாணவ-மாணவியர் தேர்வு புதன்கிழமை(ஜூன் 24) நடைபெற உள்ளதாக மாவட்ட தடகளச்சங்கத் தலைவர் எம்.சாதிக்அலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியது: 13-ஆவது ஜூனியர் தேசிய தடகளப் போட்டிகள் செப்டம்பர் 5 முதல் 7 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க தடகளப் போட்டி வீரர்கள் தேர்வு புதன்கிழமை ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

(File Photo)

போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ-மாணவியர் பிறப்புச் சான்று நகலுடன் அன்று காலை 9.00 மணிக்குள் மைதானத்திற்கு வரவேண்டும்.
14 வயதுக்குட்பட்டோர் பிரிவுக்கான வீரர்கள் 08.09.2001-க்குப் பின் பிறந்தவர்களாகவும், 16 வயதுக்குட்பட்டோர் பிரிவுக்கு 08.09.1999-க்குப் பின் பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.


No comments :

Post a Comment