(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, June 4, 2015

ராமேசுவரத்துக்கு கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை!!

No comments :
ராமேசுவரத்துக்கு பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என யாத்திரைப் பணியாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மாவட்ட ஊர்ககள் அனைத்தும் பயன்படும் என்பது திண்ணம்.
ராமேசுவரம் கோயில் தீர்த்தக்கிணறுகளில் பக்தர்களுக்கு உதவி வரும் யாத்திரைப் பணியாளர்கள் சங்கத்தின் 2015-2016ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், புதிய தலைவராக மகேந்திரன், துணைத்தலைவர்களாக பாண்டி, முனியசாமி,  செயலாளராக  முத்துராமன், துணைச்செயலாளர்களாக பால்ராஜ், சேதுபதி, பொருளாளராக     காளிதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: திண்டுக்கல். கரூர், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து திருக்கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக வாரம் ஒரு நாள் கோயம்புத்தூரிலிருந்து ராமேசுவரத்திற்கு இயக்கப்பட்டு வரும், கோவை விரைவு     ரயிலை வாரம் மூன்று நாள்களுக்கு இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் ராமேசுவரத்திலிருந்து மதுரை மற்றும் சென்னைக்கு பகல் நேர பயணிகள் ரயில் இயக்க வேண்டும். வெளிமாநில பக்தர்களின் வசதிக்காக வெளிமாநிலங்களிலிருந்து மதுரைக்கு வரும் அனைத்து விரைவு ரயில்களையும் ராமேசுவரம் வரை நீடிக்கவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தி: தினமணி

No comments :

Post a Comment