(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, June 4, 2015

கீழக்கரை முகம்மது சதக் தொழிற்பயிற்சிப்பள்ளி மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி!!

No comments :
கீழக்கரை முகம்மது சதக் தொழிற்பயிற்சிப்பள்ளியில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம் இரண்டு நாள்கள் நடைபெற்றது.
கீழக்கரை முகம்மது சதக் தொழிற்பயிற்சிப் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கிய முதலுதவி பயிற்சி முகாமுக்கு முதல்வர் அப்துல்காதர் தலைமை வகித்தார். இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.பாலமுருகன் முன்னிலை வகித்தார். பயிற்சி அலுவலர் ராமசாமி வரவேற்று பேசினார். பயிற்சி முகாமை மாவட்டச் செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம் தொடங்கி வைத்துப் பேசினார்.

மாநில முதலுதவி பயிற்றுநர் வி.அன்பழகன், மாவட்ட முதலுதவி பயிற்றுநர் எஸ்.சொக்கநாதன் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில் , உயிரைப் பாதுகாக்கும் முறைகள், மனித உடல் செயல்படும் விதம், முதலுதவியின் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை உள்ளிட்டவை குறித்து    செயல்முறை விளக்கத்துடன் மாணவ, மாணவியருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவின் போது பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் பாரதிராஜா, ஈமான் அலி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 விழாவில், மாணவர்கள் ஆன்ந்தகிருஷ்ணன், அசோக் ஆகியோர் பேசினர். மாவட்ட இணைச் செயலாளர் சி.குணசேகரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை எஸ்.பழனிச்சாமி, எஸ்.கருப்புச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.

No comments :

Post a Comment